Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

அரசு வழங்கிய நிதிக்கு யாரோ பெயர் வைக்கிறார்கள்: தொடரும் நாடகங்கள்!



புத்தளத்தில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வன்னியை சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவர் தான் வழங்கியது போல நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருப்பதாக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாருக் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்றையதினம் வவுனியாவில் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய ஆட்சியில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச போன்ற அமைச்சர்கள் தமக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை என்ற பிரசாரத்தை முன்னெடுக்கின்றார்கள். வன்னியில் மிகவும் குறைவாக இருக்கின்ற இனமாக சிங்கள மக்கள் காணப்படுகின்றார்கள்.

எனினும் அபிவிருத்தி சார்ந்த பல்வேறு விடயங்களிலும் அவர்களை நாம் ஒதுக்கிக்கொள்ளவில்லை. அந்த மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதற்காவே சிங்கள கிராமங்களின் முக்கியஸ்தர்களை இன்று சந்தித்துள்ளோம்.

இங்கு வசிக்கும் சிங்கள மக்கள் எமக்கு ஒத்தாசையாக இருக்கின்றார்கள். ஜக்கிய மக்கள் சக்திக்காக முழு மூச்சாக உழைப்பதற்கு அவர்கள் தாயாராக இருக்கின்றார்கள்.இன்று மொட்டு சின்னத்தில் களம் இறங்கியுள்ள வேட்பாளர்கள் தடுமாற்றமான நிலையில் காணப்படுகின்றார்கள்.

மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசிக்கும் முஸ்லிம்களுக்காக 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்க அதிகாரிகள் சென்ற நிலையில், முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவருடைய ஆட்கள் அங்கு சென்று அந்த பணத்தை அவர்கள் கொடுப்பது போல பெரிய நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றார்கள்.

அரசு வழங்கிய பணத்துக்கு தாம் பெயர் வைக்கும் நிலையை பார்க்கும் போது மிகவும் அவமானமாக இருக்கிறதென அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments