ஆகஸ்ட் இரண்டாம் திகதி இலங்கை மீண்டும் வெளியுலகத்திற்கு திறக்கப்படுவதால் சுற்றுலாத்துறையை தயார்ப்படுத்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அமுலாக்கும். இதன்படி துறைசார்ந்தோர் அனுசரிக்க வேண்டிய வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இவற்றை அனுசரித்து நடக்கும் நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் வாகனங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
0 Comments