கருணா தெரிவித்த விடயம் தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
ஜனநாயகத்திற்கு எதிராகவும் ஜனநாயக கட்டமைப்பிற்கு எதிராகவும் ஆயுதமேந்துபவர்களை அரசாங்கமும் சமுகமும் எதிர்க்கும்.
கருணா தனது கடந்தகாலம் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது.
விசாரணைகள் இடம்பெறவேண்டும் உண்மை வெளிவரவேண்டும், என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் கருணா தெரிவித்துள்ளதை ஜெனீவா கேள்விப்பட்டிருக்கும் இதன் காரணமாக விடுதலைப்புலிகளின் ஈவிரக்கமற்ற தன்மை மேற்குலகிற்கு தெரியவந்திருக்கும் என மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments