ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு இராணுவத்துக்கும் இடையிலான மோதல் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இராணுவ முகாம்கள் சோதனைச் சாவடிகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு இராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் அந்த நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள ஜாவ்ஷான் மாகாணத்தில் பாலாகிஷார் என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
மோட்டார் சைக்கிளில் வந்த 10கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ராணுவ முகாமை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ராணுவ வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் தக்க பதிலடி கொடுத்தனர்.
0 Comments