எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் தன்னை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பினால், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு செல்லும் எவராக இருந்தாலும் அவர்களின் தாடைகளை உடைக்கப்பேன் என அக்கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைவது தொடர்பாக ராஜபக்சவினருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக பரவி வரும் வதந்தி சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே மேர்வின் சில்வா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, தகவல் வெளியிட்டுள்ள அவர்,
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எப்போதும் ராஜபக்சவினருடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்ட நபர் அல்ல.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் தன்னை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பினால், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு செல்லும் எவராக இருந்தாலும் அவர்களின் தாடைகளை உடைப்பேன் என்றார்.
இதேவேளை, மேர்வின் சில்வா எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments