பூநகரி கிராஞ்சி மொட்டையன் குளம் கிராமத்தில் மக்களுக்குரிய காணியை வனவள திணைக்களம் இன்றையதினம் தமக்குரிய காணி என அடையாளப்படுத்தி பொதுமக்களை காணிக்குள் செல்லவிடாது தடுத்ததால் அங்கு மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது.
பொது மக்கள் சிலருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொது மக்களின் அழைப்பை ஏற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
அங்கு இடங்களை பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பாதிப்புகளை கேட்டறிந்து உரிய சட்ட நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதுடன் திங்கள் கிழமை கிளிநொச்சி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு சட்ட உதவி வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
0 Comments