Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

பேரினவாதிகளுக்கு பின்னால் நிற்பவர்களுக்கு வாக்களித்தால் மக்கள் உருக்குலைந்து போகும் நிலை தான்!



எமது கொள்கைகளை குழிதோண்டி புதைத்து விட்டு எந்த ஒரு அரசுக்கும் நாங்கள் ஆதரவு வழங்கமாட்டோம் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.

வவுனியா கிடாச்சூரி கண்ணகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

இம்முறை தேர்தலில் பேரினவாதிகளுக்கு பின்னால் நிற்பவர்களுக்கு வாக்களித்தால் மக்கள் உருக்குலைந்து போகும் நிலை ஏற்படும். இந்த தேர்தலானது தமிழ் மக்களின் இருப்பை உறுதிசெய்வதற்கான தேர்தலாகும். அண்மையில் நடந்த தேர்தலில் கோட்டாபாய வெற்றி பெற்றதன் பின் இராணுவ அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஒரு அடக்குமுறை செயற்பாட்டை செய்துவருகின்றார். இவர்கள் நாடாளுமன்ற சட்டம் எதனையும் மதிக்கவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இம்முறை பேரினவாதிகளுக்கும், அவர்களுக்கு பின்னால் நிற்பவர்களுக்கும் அவர்களோடு சுயேட்சையில் வாக்கு கேட்கின்றவர்களுக்கும் மக்கள் வாக்களித்தால் நிச்சயமாக மக்கள் உருக்குலைந்து போவார்கள்.

வவுனியா மாவட்டத்தில் பல்வேறு ஊடுருவல் நடக்கின்றது. தற்போது வவுனியா மாவட்டத்திற்கு ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் தேவை. அதற்காகதான் இவர்கள் பாடுபடுகின்றனர். எமக்கு ஒரு சிங்கள வாக்கோ முஸ்லிம் வாக்கோ கிடைப்பதில்லை. எமது தமிழ் மக்கள் இதனை நன்கு புரிந்து கொண்டு வாக்களிப்பார்கள். நிச்சயமாக நாம் இம்முறை ஒரு பெரிய வெற்றியை பெறுவோம்.

எமது கொள்களை குழிதோண்டி புதைத்துவிட்டு எந்த ஒரு அரசுக்கும் நாங்கள் ஆதரவு வழங்கமாட்டோம். எமது உரிமைகளை மக்களின் வாழ்வாதார விடயங்களை விட்டுக்கொடுக்காமல் இருந்து கொண்டு தான் எவருக்குமான ஆதரவினையும் கொடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments