Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கோட்டாவின் சர்வதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி: காலம் கடந்து வெளியான தகவல்



எதிர்வரும் பொதுத் தேர்தலில் சர்வாதிகார அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாட்டு மக்கள் அதிகாரத்தை வழங்க மாட்டார்களென ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பெலவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

பொதுத் தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும்.

அன்றைய நாளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி வில்லியம் கொப்பலாவ போன்ற ஜனாதிபதியாகவே கோட்டாபய ராஜபக்ஷ இருக்க நேரிடும்.

சஹ்ரானின் குண்டு தாக்குதல்கள் காரணமாக நாடு இனவாத ரீதியாக பிளவுப்பட்டு போனது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி மாத்திரமல்ல அடுத்த வந்த ஜனாதிபதியும் பொறுப்புக் கூற வேண்டும்.

உறங்கிக் கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ஷ சஹ்ரானின் குண்டு தாக்குதலின் பின்னரே விழித்தெழுந்தார்.

இதனடிப்படையில் சிந்தித்து பார்க்கும் போது சதித்திட்டத்தை தீட்டியது யார் என்பது தெளிவாகுமென அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments