ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத தேர்தலின் இறுதிப் பெறுபேறுகளை அடுத்த நாள் இரவு 8 மணிக்கு முன்னதாக பெரும்பாலும் வழங்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிலவேளை ஏதாவது தடைகள் ஏற்பட்டால் இரவு 10 மணியாகலாம் என்றும் அவர் கூறினார்.
எனினும் தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்கள் தொடர்பான விபரம் வெளியிடுவதற்கு அதை விட காலம் எடுக்கும் என்று அவர் கூறினார்.
மொனராகலையில் இன்று இடம்பெற்ற, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கான ஒன்றிணைந்த வாக்கு எண்ணும் ஒத்திகை நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
0 Comments