Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் இராணுவ ஆட்சி உருவாகிவிடும் - “பிரைடே போறம்” எச்சரிக்கை



ஜனாதிபதி உருவாக்கியுள்ள செயலணி தொடர்ந்து செயற்பட்டால், சிவில் நிர்வாகம், எழுதப்பட்ட அரசமைப்பின் கீழ் இலங்கையில் இராணுவ ஆட்சியை உருவாக்கிவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் சாவித்திரி குணசேகர தலைமையிலான 'பிரைடே போறம்" என்ற அமைப்பே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கலாநிதி ராதிகா குமாரசுவாமி, உட்பட இலங்கையின் புத்திஜீவிகள் கல்விமான்கள் பலரை உள்ளடக்கி பிரைடே போறம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் 2020 இல் ஏற்பாடு செய்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி நீதித்துறையின் சுதந்திரமே சட்டத்தின் ஆட்சிக்கு முக்கியமான விடயம் என தெரிவித்திருந்தார்.

நீதித்துறையின் சுதந்திரமின்றி சட்டத்தின்ஆட்சி தோல்வியடையும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

நீதித்துறையினர் அரசாங்கத்தினர் அனைத்து பொதுமக்கள் உட்பட தொடர்புபட்ட அனைவரும் இணைந்து பணியாற்றவேண்டும், மக்களிற்கான நீதி மக்களிற்கு இலகுவானதாக ,வலுவானதாக , பயனளிப்பதாக மாற்றவேண்டும் என தெரிவித்திருந்தார்.

தேர்தல் திகதி நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான அனைத்து மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்த ஜூன் இரண்டாம் திகதி இரவு ஜனாதிபதி எந்த காரணத்தையும் வெளியிடாமல் தற்போது பணியிலுள்ள இராணுவ அதிகாரிகளிற்கு அளவுக்கதிகமான அதிகாரத்தை வழங்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான இந்த செயலணி முப்படைகளின் தளபதிகள் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது, இந்த செயலணியில் காணப்படுபவர்களில் அனேகமானவர்கள் தற்போது பணியில் உள்ளனர்.

அவர்களிற்கு சமூக குழுக்களின் ( யார் என குறிப்பிடப்படவில்லை) சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படடுள்ளது.

ஜனாதிபதி பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் நோக்கில் இந்த செயலணியை உருவாக்கியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை சவாலுக்கு உட்படுத்தும் வேளைகளில் ஜனாதிபதியும்,அரசாங்க அமைச்சர்களும் தொடர்ச்சியாக நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தான நிலையில்லை என தெரிவித்து வந்துள்ள நிலையிலேயே இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஜனாதிபதி நாடாளுமன்றம் இன்றி,தனது அதிகாரத்தின் மீதான அரசமைப்பின் மட்டுப்பாடுகள் இன்றி ஆட்சிபுரிவதற்கு வழிவகுத்துள்ளது கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் அரசமைப்பின் கட்டுப்பாட்டிற்கு வெளியே,நிறைவேற்று அதிகாரத்தின் ஏனைய பிரிவுகளிற்கு வெளியே இயங்க கூடிய அரசமைப்பு ஸ்தாபனங்களை உருவாக்க முடியும் என்ற நிலைப்பாடும் உருவாக்கப்பட்டுள்ளது.

2020 ம் ஆண்டு சட்டமாநாட்டில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி தெரிவித்தது போன்று, புதிய செயலணிகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் நாட்ல் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் விதத்தில் அமைந்துள்ளனவா அல்லது பலவீனப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளனவா என்பதை ஜனாதிபதி ஆராயவேண்டும்.

இது நாட்டின் அரசமைப்பு, அடிப்படை சட்டங்களிற்கு உட்பட்டதாக காணப்படுகின்றதா? அவ்வாறானதாக அது காணப்படாவிட்டால் சட்டத்தின் ஆட்சிக்கு முரணானதாக காணப்படுகின்றதா எனவும் ஆராயவேண்டும்.

இதன் பின்னர் ஜனாதிபதி நாட்டின் அரசமைப்பை பாதுகாப்பேன் என எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்தின் அடிப்படையில், அரசமைப்பின் கீழ் தனக்குள்ள சட்டரீதியான கடப்பாடுகளின் அடிப்படையில்,மற்றும் தான் வெளிப்படுத்திய வெளிப்படையான கருத்துக்களின் அடிப்படையில் வர்த்தமானி அறிவித்தல்களை விலக்கிக்கொள்ளவேண்டும்.

இதேபோன்று இராணுவ அதிகாரிகள் இந்த செயலணியில் இடம்பெறுவதற்கான வேண்டுகோளை ஏற்க கூடாது.இராணுவ அதிகாரிகளும் அரசமைப்பினை பாதுகாப்பது மதித்து நடப்பதற்கான சத்தியப்பிரமாணங்களை எடுத்துக்கொள்கின்றனர்.

இலங்கையின் அரசமைப்பில் ஜனாதிபதிக்கு இவ்வாறன செயலணிகளை உருவாக்குவதற்கான ,அதற்கான ஆணைகளை உருவாக்குவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் எனினும் அரசமைப்பின் குறிப்பிட்ட பகுதியில் இந்த அசாதாரணமான வர்த்தமானி அறிவித்தலின் நோக்கத்தின் அளவிற்கு எதுவும் அதிகாரம் எதுவும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படவில்லை.

இந்த செயலணிக்கான ஆணையை நாங்கள் ஆராயும்போது ஆட்சிமுறையின் மீதான இதன் தாக்கம் என்னவென்பது குறித்து நாங்கள் கவனத்தில் எடுக்கவேண்டியுள்ளது.

செயலணிக்கு தனது வழங்கப்பட்ட ஆணையின் கீழ் வரும் அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்வதற்கான அதிகளவான அதிகாரம் காணப்படுகின்றது.

இந்த செயலணியால் சமூக குழுக்களிற்கு,அரச ஊழியர்களிற்கு அரச ஸ்தாபனங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களிற்கு உத்தரவினை பிறப்பிக்க முடியும்.

இந்த உத்தரவினை பின்பற்ற மறுப்பவர்கள் குறித்து ஜனாதிபதியிடம் இந்த செயலணி நேரடியாக முறையிட முடியும்.

தேர்தல்கள் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு,பொதுச்சேவை ஆணைக்குழு அரச பல்கலைகழங்கள், அரச ஊடகங்கள், மற்றும் தகவல் உரிமை ஆணைக்குழு போன்றவையும் அரச அமைப்புகள் , இவற்றிற்கும் செயலணியினால் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என தோன்றுகின்றது.

அவர்கள் அதனை பின்பற்றவேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது போலவும் தோன்றுகின்றது.

தேர்தல்களை நடத்துவது , பொதுச்சேவை மற்றும் பொலிஸ் நியமனங்கள், இடமாற்றங்கள்,மேலும் பரந்துபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளும் இந்த செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள அளவுக்கதிகமான அதிகாரங்களிற்குள் அடங்குகின்றன போல தோன்றுகின்றது.

இந்த செயலணி தொடர்ந்து செயற்பட்டால் சிவில் நிர்வாகம், எழுதப்பட்ட அரசமைப்பின் கீழ் இலங்கையில் இராணுவ ஆட்சியை உருவாக்கிவிடும்.

சிவில் ஆட்சி முறைக்கு ஆதரவாக இராணுவம் செயற்பட்டதன் காரணமாகவே கொரோனாநோய்தொற்றை நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது,உயிர்த்த ஞாயிறு தாக்குதல், சுனாமி போன்றவற்றையும் நாங்கள் எதிர்கொள்ள முடிந்தது என்பதை நாங்கள் மறக்ககூடாது.

பொதுபாதுகாப்பு தொடர்பான இராணுசெயலணி அரசமைப்பினதும், பொதுஅமைப்புகளினதும்

கண்காணிப்பு இல்லாமல் செயற்படும்.

இது நாட்டில் இராணுவசர்வாதிகாரத்தை ஏற்படுத்துவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக அமையும்.

சுயாதீன ஆணைக்குழுக்கள்,தொழில்சார் அமைப்புகள்,ஊடகங்கள்,சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மற்றும் அனைத்து பொதுமக்களும் இந்த வர்த்தமானி அறிவித்தலை தீவிரமான விடயமாக கருதவேண்டும்.

அதில் உள்ள உள்ளடக்கங்களை அவசரமானவையாக கருதி அவர்கள் அனைவரும் பதில் அளிக்கவேண்டும்.

வர்த்தமானி அறிவித்தலை விலக்கிக்கொள்ளுமாறு நாங்கள் அனைவரும் ஜனாதிபதியை கேட்டுக்கொள்ளவேண்டும்.

அரசமைப்பிற்கு சமாந்திரமாக செயற்படுவதற்கான ஸ்தாபனமாக உருவாக்கப்பட்டுள்ள இராணுவ செயலணிக்கு பரந்துபட்ட அதிகாரங்களை வழங்கவேண்டாம் என நாம் அனைவரும் ஜனாதிபதியை கேட்டுக்கொள்ளவேண்டும்.

அதிகாரத்தில் உள்ளவர்களிடம் உண்மையை தெரிவிப்பதற்கான தருணம் இது என குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments