ஸ்ரீலங்காவில் உள்ள சிறைகளில் பணியாற்றிய பத்தொன்பது தலைமை சிறைக்காவலர்கள் உடன் அமுலுக்கு வரும்வகையில் நேற்றையதினம் (25) இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட சிறை அதிகாரிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமை அதிகாரியும் அடங்குவார் எனவும் அவர் தலைமை சிறைச்சாலை அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு தும்பர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என சிறைச்சாலைகள் ஆணையர் ஜெனரல் துஷாரா உபுல்தெனிய தெரிவித்தார்.
மேலும் 06 புதிய தலைமை சிறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சிறைச்சாலையில் உள்ள ஒரு கைதிக்கு 7 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முயன்றபோது பிடிபட்ட பூசா சிறைச்சாலையில் உள்ள சிறைக் காவலர் ஒருவர் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டு விசாரணைகள் நடந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
0 Comments