Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கைதானவரின் மனைவிக்கு கொரோனா -மூடப்பட்டது பொலிஸ் நிலையம்



திருச்சியில் கைது செய்யப்பட்டவரின் மனைவிக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 36 போலீசார்

திருச்சியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து 36 பொலிசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் காவல்நிலையமும் மூடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பெண் ஒருவர் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, அப்பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவரின் நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றவாளிகளைக் கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் பணியில் இருந்த 36 பொலிசார் தனிமைப்படுத்தப்பட்டு, தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பொலிசாரின் குடும்பத்தினர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இதையடுத்து காவல் நிலையத்தை மூடி, கிருமி நாசினி தெளித்து, தூய்மைப்படுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments