Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வாட்டி வதைக்கிறது கொரோனா



பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று நபர்களுக்கு நேற்று கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஏழு வீரர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ரி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. செப்ரெம்பர் - நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள இந்த தொடருக்கு 29 வீரர்கள் 14 ஊழியர்கள் வரும் 28ம் திகதி இங்கிலாந்து புறப்படவுள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து செல்லும் வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஷாதப் கான், ஹரிஷ் ராஃப், ஹைதர் அலி என மூன்று வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது.

இந்நிலையில் ஃபகர் ஸமான், இம்ரான் கான், காசிஃப் பாத்தி, முஹம்மது ஹபீஸ், முஹம்மது ஹஸ்னைன், முஹம்மது ரிஸ்வான், வஹாப் ரியாஸ் ஆகிய ஏழு வீரர்களுக்கு தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்து செல்லவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 10 வீரர்களுக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொற்று உறுதியாகியுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இங்கிலாந்து புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் அனுபவ வீரர் சோயப் மாலிக் உள்ளிட்ட 5 வீரர்கள் கொரோனோ சோதனை முடிவிற்காகக் காத்திருக்கின்றனர்.

Post a Comment

0 Comments