கருணா, விடுதலைப்புலிகளை பிளவுபடுத்தினார் இதன் காரணமாகவே அந்த அமைப்பிற்கு எதிரான போரில் அரசாங்கம் வெற்றிபெற முடிந்தது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது மகிந்த தலைமையிலான இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடஉள்ளவருமான எஸ்.பி. திசநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
கருணா பயங்கரவாதியாக இருந்தவேளை அநீதிகளில் ஈடுபட்டவர்தான். எனினும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும்
விடுதலைப்புலிகளை ஒழிப்பதில் கருணா தீர்க்ககரமான சக்தியாக விளங்கினார்.
கருணாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் இந்த விடயம் கவனத்திற்கு எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments