அடுத்த பாராளுமன்றத்திற்கு நாட்டிற்காக வேலை செய்யக்கூடிய நாட்டிற்காக முன்னிறங்கும் பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குருநாகல் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
திட்டங்களின் கீழ் கிராம மட்டத்தில் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதன் ஊடாக முழுநாட்டையும் தொழில் தளமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமென பிரதமர் இங்கு குறிப்பிட்டார்.
நாட்டை பொருளாதார வளமிக்கதாக மாற்றுவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்டவரையும் பாராளுமன்றத்தில் அதிகாரம் கொண்டவரையும் ஒரே கட்சியிலிருந்து தெரிவு செய்ய வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்ததெனவும் பிரதமர் தெரிவித்தார்.
0 Comments