Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

இந்தியா மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கும் சீனா! தற்போது வெளியான புதிய தகவல்



மே 6ஆம் திகதி இந்திய வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உண்மையான எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை தாண்டி சென்றதாக சீனா மீண்டும் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கடந்த 15ஆம் திகதி இரவு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்த போரில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீனா தரப்பில் 35 பேரும் உயிரிழந்தனர் என கூறப்படுகின்றது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா ஊடுருவியதே மோதலுக்கு காரணம் என இந்தியாவும்,

இந்திய வீரர்கள் எல்லை தாண்டியதால்தான் இந்த மோதலும் உயிரிழப்பும் ஏற்பட்டதாக சீனாவும் குற்றம் சாட்டி வருகின்றது.

இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது,

“கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா தொடர்ந்து தன்னிச்சையாக சாலைகள், பாலங்கள் போன்ற கட்டுமானங்களை நடத்தி வருகிறது.

இதற்கு சீனா பலமுறை தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. ஆனால் இதை கேட்காத இந்தியா உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியையும் தாண்டி வந்து ஆத்திரமூட்டும் செயல்களை செய்கிறது.

கடந்த மே 6ஆம் திகதி தடுப்பு வேலிகள் போன்றவை அமைப்பதற்காக கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை இந்திய வீரர்கள் முதலில் தாண்டி வந்தனர்.

இது சீன வீரர்களின் ரோந்து பணிக்கு இடையூறாக அமைந்தது. அங்கு நிலவும் இயல்பு நிலையை குலைப்பதற்கு வேண்டுமென்றே தன்னிச்சையாக முயன்றனர்.

எனவே அன்று இருதரப்பு ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ரோந்து மற்றும் கட்டுமானங்களுக்காக கல்வான் நதிக்கரையை தாண்டமாட்டோம் என இந்தியா உறுதியளித்தது.

இதைத்தொடர்ந்து அங்கிருந்து இரு தரப்பும் படைகளை விலக்குவது என முடிவெடுத்தது.

ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக கடந்த 15ஆம் திகதி மாலையில் இந்திய முன்கள வீரர்கள் மீண்டும் எல்லை தாண்டி வந்து அங்கு தணிந்திருந்த பதற்றத்தை குலைத்து விட்டனர்.”

இவ்வாறு ஜாவோ லிஜியான் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments