Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

முதியவரை நெகிழ்ச்சிப்படுத்திய மஹிந்த: தாராள மனப்பான்மைக்கு கிடைத்த கௌரவிப்பு!





கொவிட்-19 நிதியத்திற்காக பிரதமருக்கு ஐயாயிரம் ரூபாவை அனுப்பி வைத்த முதியவருக்கு, நேரடியாக அதனை ஜனாதிபதியிடம் கையளிக்கும் வாய்ப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

மெதிரிகிரியவைச் சேர்ந்த முன்னாள் கிராம சங்க உறுப்பினர் எஸ்.பி.ஹேவாஹெட்ட (வயது – 86) அண்மையில் அலரி மாளிகைக்கு ஐயாயிரம் ரூபாய் பணத்தாள் சகிதம் கடிதமொன்றை அனுப்பிவைத்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு கிடைக்கும் வகையில் குறித்த பணமும் கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதனை ஹேவாஹெட்ட அவர்கள் இன்று (20.06.2020) முற்பகல் தமது கைகளினாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.

ஒரு மூத்த குடிமகனாக சமூக பொறுப்பை ஏற்று குறித்த பணத்தை அனுப்பிவைத்த திரு. ஹேவாஹெட்டவின் தாராள மனப்பான்மையை கௌரவிக்க வேண்டுமென கருதிய பிரதமர் ஹேவாஹெட்டவின் கைகளினாலேயே அதனை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு செய்யுமாறு பிரதமரின் செயலாளர் காமினி செனரத் அவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதனடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்தநாளான இன்று மிரிசவெட்டிய புனித பூமியில் இடம்பெற்ற தானம் வழங்கும் நிகழ்வின்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் ஹேவாஹெட்ட அவர்கள் குறித்த நிதியை கொவிட்-19 நிதியத்திற்காக ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

இதன்போது ஹேவாஹெட்ட அவர்களின் குடும்பத்தாரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments