கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பாரியளவில் பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்
ஒரு வைத்தியர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த மேலதிக நேர கொடுப்பனவு பணத்தை திடீரென வைத்தியாலைக்குள் நுழைந்த கொள்ளையன் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி கொள்ளையிட்டு சென்றுள்ள நிலையில் வைத்தியசாலைக்கு வந்திருந்த தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவர் குறித்த கொள்ளையனை விரட்டி சென்றுள்ள அதேவேளை அவனை மடக்கி பிடித்துள்ளனர்.
குறித்த புலனாய்வு அதிகாரிகளுடன் வைத்திய தேவை ஒன்றுக்கு வந்த பெண் அதிகாரி ஒருவரும் குறித்த கொள்ளையனை மடக்கி பிடிக்க உதவியுள்ளதாக கூறப்பட்டது.
மடக்கிபிடிக்கப்பட்ட, கொள்ளையன் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments