Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்த திணறும் ஸ்ரீலங்கா அரசு: தப்பிக்க முற்படும் சூத்திரதாரி!



ஸ்ரீலங்கா மத்திய வங்கி பிணை முறி மோசடியின் பிரதான சூத்திரதாரியாக குற்றம் சுமத்தப்படும் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வருவதில் நாடு கடத்தல் சட்டம் தடையாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூருக்கும், ஸ்ரீலங்காவுக்கும் இடையில் கைதிகளை பரிமாறிக்கொள்ளும் உடன்படிக்கைகள் எதுவுமில்லை.

உடன்படிக்கை மூலமான கடப்பாடுகள் இல்லாத காரணத்தினால் சிங்கப்பூர் பிரஜை ஒருவர் ஸ்ரீலங்காவில் செய்த குற்றம் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதில் சிரமமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சிங்கப்பூர் உள்நாட்டு அலுவல்கள் அமைப்பு உத்தியோகபூர்வமற்ற ரீதியில் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதானி ஒருவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சட்ட சம்பிரதாயங்களுக்கு அமைய குற்றவாளிகளை பரிமாறிக்கொள்வது சம்பந்தமான ஏற்பாடுகள் இருக்கின்றனவா? என்பது தொடர்பாக இரண்டு நாடுகளின் அரசாங்கமும் ஆராய்ந்து வருகின்றது.

அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூர் நாட்டின் நிரந்தர பிரஜையாக இருந்தாலும், தனது பெயரை மாற்றிக்கொண்டாலும் குற்றச்சாட்டில் இருந்து எந்த வகையிலும் தப்பிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பிரஜையான அர்ஜூன் மகேந்திரன் வங்கித்துறையில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரி என்பதுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்திலும் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் தலைவர் உட்பட முக்கிய அரச பதவிகளை வகித்து வந்தவர்.

அவரது பெற்றோர் ஸ்ரீலங்கா அரச சேவை ஊழியர்கள் என்பதுடன் இவர் 2007 ஆம் ஆண்டுக்கு பின்னரே சிங்கப்பூர் குடியுரிமையை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments