11 இளைஞர்களை கடத்திய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 17 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் கொட்டாஞ்சேனை, வௌ்ளவத்தை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்தது.
அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கடற்படையைச் சேர்ந்த சம்பத் முனசிங்க, டி.கே.பி.தஸநாயக்க, சுமித் ரணசிங்க, லக்ஷமன் உதயகுமார, நளின் பிரசன்ன விக்ரமசூரிய, தர்மதாஸ, ராஜபக்ஷ கித்சிரி, கஸ்துரிகே காமினி, அருண துசார மென்டிஸ் ஆகியோர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டதுடன் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை தொடர்ந்து இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 Comments