Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நாயகனாக நடித்தவரின் விபரீத முடிவு -திரையுலகமே சோகத்தில்



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 34. அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 6 மாதங்களாக மனஅழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார் என்று பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மும்பை பந்தராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அறையின் கதவை உடைத்து உடலை கைப்பற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் சின்னத்திரையில் நடித்து வந்தார். டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது முன்னாள் முகாமையாளர் திசா தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவிற்கு வருத்தத்தையும், அவரது குடும்பத்தாருக்கு தனது இரங்கலையும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments