கனடாவில் தாதிய பயிற்சி மாணவியை பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மிகவும் மோசமாக நடத்தும் வீடியோ ஒன்று வெளியாகி பல்வேறு தரப்பினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது
கெலோனாவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தாதியர் பயிற்சி பெறுபவர் Mona Wang. உளப்பிறட்சி பிரச்சினை கொண்ட Monaவுக்கு உதவி தேவை என அவரது ஆண் நண்பர் பொலிசாரை அழைத்துள்ளார்.
ஆனால் உதவிக்காக வந்த Cpl. Lacy Browning என்னும் பெண் பொலிசாரோ, தன்னை தாக்கியதாகவும் அவமதித்ததாகவும் புகாரளித்திருந்தார் Mona.
ஆனால், தான் சென்று பார்க்கும்போது, Mona குளியலறையில் விழுந்துகிடந்ததாகவும், அவர் அருகே மாத்திரைகளும், வைன் போத்தல் ஒன்றும் கிடந்ததாகவும், அவர் கையில் கத்தி ஒன்றை வைத்திருந்ததாகவும், Monaவை தான் வெறுங்கையால்தான் தாக்கியதாகவும், அதுவும் அவருக்கு விலங்கிடுவதற்காகத்தான் என்றும் கூறியிருந்தார் Lacy.
ஆனால், தான் பாதி நினைவுடன் குளியலறையில் கிடந்தபோது Lacy தன்னை வயிற்றில் மிதித்ததாகவும், தன் கையில் ஏறி நின்றதாகவும் தெரிவித்தார் Mona.
எனவே, அந்த கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவான காட்சிகளை சோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த வீடியோவில் சரியான நினைவின்றி கிடக்கும் Monaவை அந்த பெண் பொலிசார் வழி முழுவதிலும் தரதரவென கையைப் பிடித்து இழுத்துவரும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
மேலாடை அணியாமல், வெறும் உள்ளாடை மற்றும் வெனியன் மட்டும் அணிந்திருக்கும் Monaவை, கட்டடத்தின் முன் பக்கத்திற்கு இழுத்துவரும் Lacy என்னும் அந்த பெண் பொலிசார், ஒரு கட்டத்தில் கீழே கிடந்த Mona மெதுவாக தலையை உயர்த்த, காலால் அவரது தலையை மிதித்து தள்ளும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.
பின்னர், Monaவின் தலை முடியையும் தோளையும் பிடித்து தூக்கும் அந்த பெண் பொலிசார், அவரை ஒரு அறைக்குள் இழுத்துச் செல்கிறார்.
வீடியோ காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், பெண் பொலிசான Lacyயை நிர்வாக பொறுப்புகள் துறைக்கு பணிமாற்றம் செய்துள்ளதோடு, துறை ரீதியான விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், தங்கள் விசாரணை முடிந்ததும் பொலிஸ் துறை தனிப்பட்ட முறையில் Lacy மீது கிரிமினல் விசாரணை மேற்கொள்ளவும் கனடா காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
0 Comments