கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நுழைந்து, துப்பாக்கி முனையில் ஒருதொகை பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் லயனல் முகந்திரம் தெரிவித்துள்ளார்.
கொள்ளையிடப்பட்ட பணத்தொகை இன்னும் மதிப்பிடப்படவில்லை. சந்தேகநபர், ஊதியப் பிரிவின் அதிகாரி ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டு சென்றதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 Comments