Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கிழக்கில் திடீரென கொதி நிலையையடைந்த கிணற்று நீர்! பதற்றத்துடன் ஒன்று கூடிய மக்கள்











கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் வெந்நீர் கொதி நிலையையடைந்து ஆவியாக வெளிவந்ததையடுத்து மக்கள் ஒன்று கூடியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் உள்ள கிணற்று நீர் கொதி நிலையாக காணப்படுவதாகவும் ஆவியாக வெளியேறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மக்கள் ஒன்று கூடியதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இந்திக்க உதயங்கர மற்றும் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் மின்சார சபை ஊழியர்கள் சென்று பார்வையிட்டனர்.

சம்பவ இடத்தில் மேற்கொண்ட ஆய்வில் மின்சார கம்பி ஒன்று அறுந்த நிலையில், கிணற்றில் காணப்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட மின்சார ஒழுக்கினால் தான் நீர் சூடாகி ஆவியாதாக எரிபொருள் நிலைய ஊழியர் ஒருவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார். இறுதியாக உண்மை தெரிய வந்ததை அடுத்து அப்பகுதியில் நிலவிய சிறுபதற்றம் நீங்கி ஒன்று கூடிய மக்கள் கலைந்து சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments