Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

இன்று சி.ஐ.டியில் முன்னிலையாகும் கருணா!




கருணா இன்றைய தினம் சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடிக்கு சென்று வாக்கு மூலம் வழங்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணா அம்மான் எனும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள, சர்ச்சைக்குரிய கருத்து, அதன் உள்ளடக்கத்தின் உண்மைத் தனமை தொடர்பில் குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் சிறப்புக் குழு விசாரணைகளை கடந்த 3 தினக்களுக்கு முன்னர் ஆரம்பித்தது.

எனினும் கடந்த மூன்று நாட்களாக கருணா சி.ஐ.டி.யில் ஆஜராகாத நிலையில், நேற்று முன்தினம் தனக்கு சுகயீனம் காரணமாக விசாரணைக்கு சமூகமளிக்க முடியாது எனவும் சுகம் பெற்றதும் வருவதாகவும் சட்டத்தரனி ஊடாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் சி.ஐ.டிக்கு சென்று வாக்கு மூலம் வழங்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவுக்கு விடுத்துள்ள விஷேட உத்தரவுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments