Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் -பாதுகாப்பு செயலர் உறுதியளிப்பு



கடத்தல்காரர்களுடன் இணைந்து செயற்படும் மற்றும் உதவி புரியும் சிறைச்சாலை, சட்ட அமலாக்க மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ,ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக துஷ்பிரயோகம் செய்யும் சீருடை அணிந்த அதிகாரிகளை அடையாளம் காண சட்ட அமலாக்க அதிகாரிகள் ஏற்கனவே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார் .

"நாங்கள் இராணுவ கலாசாலையில் இருந்தபோது, ​​மிகவும் ஆபத்தான எதிரி யாரெனில் அவர்கள் எமக்குள்ளே இருக்கும் எதிரிகளாகும் என எங்களுக்கு கற்பிக்கப்பட்டது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க நமக்குள் இருக்கும் இந்த எதிரியை நாம் இப்போது அடையாளம் கண்டு உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில் அது ஒரு பயனற்ற முயற்சியாக அமைந்துவிடும் ”என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

நிட்டம்புவ தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையில் ஜூன் 26 காலை இடம்பெற்ற புதிய புனர்வாழ்வு நிலையக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் உரையாற்றிய அவர், விரைவில் இலங்கையிலிருந்து போதைப்பொருளை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக உறுதியளித்தார்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு பயனுள்ள வாழ்க்கையை தொடங்குவதற்காக அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகள் தொடங்கப்பட வேண்டும் எனவும் இதற்காக அவர்களுக்கு அனுதாபம், பரிவு மற்றும் உதவி என்பன அவசியமாகும் என மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

ஏறக்குறைய 1,000 போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிப்பதை இலக்காகக் கொண்ட முழுமையான புனர்வாழ்வு மையம் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகத்தின் (UNODC) உதவியுடன் நிர்மாணிக்கப்படும்.

‘போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை’ முன்னிட்டு இந்த நிகழ்வு இடம்பெற்றது.

தவறான செயல்களைச் செய்வதன் மூலம் சம்பாதித்த பணத்திலிருந்து தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் அதற்காக வெட்கப்பட வேண்டும் என் கூறிய பாதுகாப்பு செயலாளர், போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாமல் ஆக்குவது ஒரு மகத்தான பணியாகும் என தெரிவித்ததுடன், எதிர்கால சந்ததியினருக்காக அனைத்து போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் , முதலாவதாக போதைப்பொருள் பாவனைக்கு இரையாகியுள்ள சிறுவர்களையும் மீட்பதும், இரண்டாவது நமது எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றுவதும், மூன்றாவது தவறு செய்பவர்களுக்கு உதவியளிக்க உத்தியோகத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களை அடையாளம் காண்பதும் ஆகும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments