Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து! மூவர் கவலைக்கிடம்



தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவ நுழைவாயிலுக்கும் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் மூன்று பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் காலி - கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த கார் ஒன்றினால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments