Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கருணா தொடர்பில் விமல் பகிரங்கத் தகவல்



புத்த பகவானை கொலை செய்ய முயற்சித்த தேவதத்தன் திருந்த முடியுமாக இருந்தால், கருணா அம்மானும் தனது கடந்த கால வரலாற்றில் இருந்து விடுப்பட்டு, அதற்கு மாறான தற்காலத்திற்கு வர முடியும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது, ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்திருந்தார்.

ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் இவ்வாறு இராணுவப் படைவீரர்களை கொன்றொழித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் கருணாவின் கருத்து தற்போது அரசியல்வாதிகள் மத்தியில் மற்றும் சமூக வலைத்தளங்களில் விவாதத்திற்கு உள்ளாகி வருகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கருணாவின் கூற்று தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் விமல் வீரவங்சவிடம் கேட்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கருணா அம்மான் விடுதலைப் புலிப் பயங்கரவாதியாக இருக்கும் போது அவரை ஐந்து சதத்திற்கும் மதிக்கவில்லை.

புலிகளிடம் இருந்து பிரிந்து, பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் மறுத்த கருணாவை ஏற்றுக் கொள்கிறோம்.

கருணா அம்மான் மாத்திரமல்ல, துப்பாக்கியை தோளில் போட்டுக்கொண்டு வாத்துவ புகையிரத பாதையில் சென்று கொண்டிருந்த போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ரில்வின் சில்வாவுக்கும் இது பொதுவானது என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments