மேலதிக வகுப்பு ஆசிரியர்களின் பல கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துரித தீர்வை பெற்று கொடுத்தார்.
இதற்கமைய இரண்டு நேர இடைவெளியில் 500 மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அகில இலங்கை தொழில் சார் விரிவுரையாளர்களின் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவை அறிவுறுத்தியது.
ஆயிரத்திற்கும் கூடுதலான மாணவர்களுக்கு கல்வியை வழங்கிய மேலதிக வகுப்புக்களை 250 மாணவர்களுக்க வரையறுப்பது சிரமமாகுமென விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இது குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய இரண்டு நேர இடைவெளியில் 500 மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொரோனா தொற்று காரணமாக உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கு 5 மாதங்களுக்கும் கூடுதலான காலம் கல்வி கற்பதற்கு கிடைக்கவில்லை. 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களும் இந்நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments