Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டிணைந்த வன்னியின் முக்கியஸ்தர்!



வன்னித் தேர்தல் தொகுதியில் சுயேட்சைக்குழு வேட்பாளர் ஒருவர் சுயேட்சைக்குழுவிலிருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார் .

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார் .

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் திருமதி ரசிக்கா பிரியதர்சினிக்கு தமிழ் மக்கள் இணையத்தின் சார்பில் சுயேட்சைக்குழுவில் வேட்புமனுத்தாக்கல் செய்த வேட்பாளர் வீரசிங்கம் கலைச்செல்வன் தனது ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போது தமிழ் மக்களுக்கு விசுவசமான ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி ஊடாக வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் களமிறங்கியுள்ள வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினிக்கு ஆதரவு வழங்குவதற்காக என்னால் செய்து கொள்ளப்பட்ட வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு எனது ஆதரவினை வழங்கவுள்ளேன். நான் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியில் உறுப்பினராக செயற்பட்டு வந்துள்ளேன்.

அக்காலத்தில் எனக்கு கட்சியினால் வழங்கவேண்டிய சில சலுகைகளை அக்கட்சியிலுள்ள சிலர் முடக்கியதால் அதிருப்பியடைந்து வெளியேறி தமிழ் மக்கள் இணையத்துடன் இணைந்து கொண்டேன். கடந்த காலங்களில் சஜித் பிரேமதாசாவின் கொள்கைகள் எனக்குப்பிடிக்கும், அவருக்காக செயற்பட்டுள்ளேன்.

யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியைப் பொறுத்தவரையில், அம்மக்கள் தமிழ் தேசியத்துக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும், அபிவிருத்தி என்ற நோக்கில் ஈ.பி.டி.பி, சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் வாக்களிக்கின்றார்கள். அங்கு தமிழ் பிரதிநிதிகளே வருகின்றார்கள், ஆனால் வன்னித் தேர்தல் தொகுதியில் அப்படியில்லை, யார் ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரே வருகின்றார், அந்த நிலைமை மாறவேண்டும்.

ஒரு சிலரின் நடவடிக்கையினால் வன்னி மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருக்கின்றவர்களின் செயற்பாடுகளினால் வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . நாங்கள் தமிழ் தேசியத்திற்கு வாக்களிக்க வேண்டும். அது எமது உரிமை மக்களுக்கு அபிவிருத்தியையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்ள நாங்கள் ஒரு அரச தேசியக் கட்சியையே நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments