Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

மக்கா செல்ல முற்பணம் செலுத்தியவர்களுக்கு முக்கிய அறிவித்தல்



இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா செல்ல முகவர்களுக்கு முற்பணம் செலுத்தியவர்கள் அவற்றை மீள பெற்றுக்கொள்ளுமாறு ஹஜ் குழுத் தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என சவூதி அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

இம்முறை ஹஜ் கடமையை சவூதி அரேபியாவுக்குள் மட்டுப்படுத்த சவூதி அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.

இது தொடர்பாக சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கு பொறுப்பான அமைச்சர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு அறிவித்தார்.

இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகள் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் எனது தலைமையிலான ஹஜ் குழு முன்னெடுத்திருந்ததோடு குறைந்த கட்டணத்தில் யாத்திரிகர்களை அழைத்துச்செல்லவும் விசேட திட்டங்கள் மேற்கொண்டிருந்தது.

என்றாலும் கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய ரீதியில் பரவி இருப்பதால் ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை நிறைவேற்ற சவூதி அரேபியாவுக்கு வருகை தருவதை அந்நாட்டு அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

அதனால் இம்முறை இலங்கையில் இருந்து ஹஜ் கடமையை மேற்கொள்ள ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களுக்கு இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கின்றது.

அதனால் அவர்களில் யாராவது ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்குச் செல்ல, ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு பணம் செலுத்தியிருந்தால், அதனை மீள பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Post a Comment

0 Comments