கதிர்காமம் காட்டுப்பகுதியில் பாரியளவிலான கஞ்சா தோட்டத்தை விசேட அதிரடிப்படையினர் இன்றையதினம் கண்டு பிடித்துள்ளனர்.
குறித்த பகுதியில் பெருமளவில் காடு அழிக்கப்பட்டு கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியை சுற்றிவளைத்து கஞ்சா பயிர்ச்செய்கை இடம்பெற்ற இடத்தை விசேட அதிரடிப்படையினர் கண்டு பிடித்தனர். இதனையடுத்து அங்கு பயிரிடப்பட்ட பெருமளவு கஞ்சா செடிகளை அவர்கள் அழித்துள்ளனர். இதன்போது எவரும் கைதானார்களா என்ற விபரம் வெளிவரவில்லை.
0 Comments