இந்த அரசாங்கம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐயாயிரம் ரூபா என்ற விலையை தீர்மானித்துள்ளது. ஓகஸ்ட் ஐந்தாம் திகதியின் பின்னர் எமது ஆட்சியின் கீழ்; 20 ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நீர்கொழும்பில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (16) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கட்சி ஆதரவாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வு ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் காவிந்த ஜயவர்தன, சிராஸ் முஹம்மத் ஆகியோருக்கு ஆதரவளிக்கும் வகையில் இடம்பெற்றது.
நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க, விஜித்தமுனி சொய்ஸா, கம்பஹா மாவட்ட வேட்பாளர் எஸ். சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ந்து உரையாற்றுகையில்,
தவறான நிருவாகம் காரணமாக நாடு வீழ்ச்சியடைந்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் பினான்ஸ் கம்பனிகளின் சீஸர்கள் வாகனங்களை கடத்துகிறார்கள். அரசாங்கத்தின் உத்தரவை அவர்கள் மதிக்கவில்லை. ஜனாதிபதி அறிவித்த ரின் மீன் மற்றும் பருப்புக்கான கட்டுப்பாட்டு விலைக்கு என்ன நடந்தது? அரசு மாபியாக்களுக்கு இன்று அடிபணிந்துள்ளது.
இந்த அரசாங்கம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையை தீர்மானித்துள்ளது. அது ஐயாயிரம்; ரூபாவாகும். ஓகஸ்ட் ஐந்தாம் திகதியின் பின்னர் எமது ஆட்சியின் கீழ் சகல குடும்பங்களுக்கும் 20 ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அமைச்சர் பந்துல குணவர்தன நான் 20 ஆயிரம் ரூபா வழங்குவதாக தெரிவித்தமை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.நான் எப்படி வழங்குவேன் என்று கூறுகிறேன். கிரிக்கட் மைதானம் அமைப்பதற்காக நான்கு இலட்சம் டொலர் பணத்தை செலவிட உததேசித்தார்கள் அல்லவா? ஆந்த பணத்தை கொண்டு 20 ஆயிரம் ரூபா வழங்குவேன்.
அமெரிக்கா, பங்களாதேஷ், இங்கிலாந்து உட்பட பல நாடுகளின அரசாங்கம் தமது மக்களுக்கு பலவிதமான நிவாரணங்களை தாராளமாக வழங்கியுள்ளன.
இம்ரான்கான் தெற்காசியாவில் பாகிஸ்தானில்தான் குறைந்த விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம். சிறிகொத்தவையும் கைப்பற்றுவோம். சிலர் கொரோனாவுக்கு மத்தியில் இனவாதத்தை கொண்டு வந்தார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற அடிப்படையில் தேர்தலின் பின்னர் மீண்டும் நான் நீர்கொழும்புக்கு வருவேன். இல்லையேல் பிரதமராக வருவேன் என்று தெரிவித்தார்.
0 Comments