Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

மாற்றுத் தலைமை என்பது அறிவீனம்: தக்க பதிலடியை மக்கள் கொடுப்பார்கள்



துரதிஸ்ரவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களையும் இணைத்து பயணிக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிந்த பின் அவர்களையும் இணைத்து இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல தான் ஆதங்கத்தோடு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களின் மாற்றுத் தலைமை பற்றிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

நான் ஒரு கட்சியின் தலைவராகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு துணைத் தலைவராகவும் இருக்கின்றேன். அவ்வாறு நான் இருந்துகொண்டு மாற்று தலைமை வேண்டும் என்று சொல்வதைப்போல அறிவீனம் வேறு ஏதும் இருக்காது.

இதேவேளை தமிழ் மக்களிடம் ஒரு மாற்றுத் தலைமை வேண்டும் என்பது பரவலான செல்வாக்கு மிகுந்த கோரிக்கையாக இன்று இல்லை.

துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருக்கின்றார்கள் எனக்கு அது மிகுந்த கவலையாக இருக்கிறது.

நாங்கள் தேர்தல் முடிந்ததற்கு பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான, மோசமான காலகட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லவேண்டும் என்ற ஆதங்கத்தோடு நான் வேலை செய்துகொண்டிருக்கின்றேன்.

மாற்றுத் தலைமை குறித்து ஜனநாயக ரீதியாக அவர்கள் யாரும் அப்படி பேசலாம், அப்படியான கட்சியாக இயங்கலாம் ஆனால் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் இன்னும் பலமடைய வேண்டும்.

மாற்றுத் தலைமை பற்றி நாங்கள் பேசவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் சிறிது சிறிதாக அரசாங்க கட்சியில் இருந்தும், சுயேச்சைகளாகவும் எங்கள் வாக்குகளை பிரிக்கின்றார்கள். அதுக்கு இடமளிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே நாங்கள் வாக்களித்து பலத்தை உண்டாக்க வேண்டும்.

அந்த பலத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனும் கருத்துத் தான் இன்று வரையிலும் மிகவும் பலமாக இருக்கின்றது.

வருங்காலத்தில் நாங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்ய ஆரம்பித்து, எங்களுடைய தேர்தல் அறிக்கையையும் முன்வைத்து, நாங்கள் பேசினால் அது இன்னும் அதிகமாகுமென நான் நினைக்கின்றேன்.

மிகப் பெரும்பாலான இடங்களை மக்கள் வெற்றிபெற வைக்கின்ற போது மாற்றுத் தலைமையினுடைய பேச்சு இல்லாமல் போகும் என நினைக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments