பூஜாபிட்டிய பிரதேச சபையில் இரு உறுப்பினர்கள் இரு விடயங்கள் தொடர்பில் எதிர்ப்பில்
ஐதேக உறுப்பினர் பொருட்களின் விலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கயில் ஐமசுமு உறுப்பினர் பேராசிரியர் ஹூலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
(மொஹொமட் ஆஸிக்)
பூஜாபிட்டிய பிரதேச சபையில் இன்று 09 ம் திகதி இடம் பெற்ற அதன் மாதாந்த பொதுக் கூட்டத்தில் இரு உறுப்பினர்கள் இரு வேறு விடயங்கள் தொடர்பாக தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
பூஜாபிட்டிய பிரதேச சபையின் தலைவர் அநுர பிரனாந்து அவர்களது தலமையில் ஆரம்பமான இன்றைய கூட்டத்தில் இவ் எதிர்ப்புகள் இடம் பெற்ற போது அவர் சபையில் இருக்க வில்லை. உப தலைவர் ஏ.எல்.எம். ரஸான் அவர்களது தலமையில் சபை இடம் பெற்றுக் கொண்டிருந்தன.
ஜக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் எஸ்.எம்.கலீல் அவர்கள் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரித்திருப்பதைஎதிர்த்து சுமார் 100 கிராம் சீனியை சபையில் முன் வைத்து பேசி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
அதே நேரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசியர் ரத்னஜீவன் ஹூல் அவர்கள் ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறியதாக கூறப்படும் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினர் அநுர மடலுஸ்ஸ அவர்கள் இலம் கருப்பு நிர மேற் சட்டையை அனிந்து வந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த ஜக்கிய தேசிய கட்சியின உறுப்பினர் எஸ் எம். கலீல் அவர்கள் இங்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த அரசாங்கத்தில் 98 ரூபாவுக்கு இருந்த சீனி ஒரு கிலோவின் விலை தற்போது 150 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும், அரிசி, கிழங்கு வெங்காயம் தேங்காய் என்னை போன்ற அனைத்து அத்தியாசிய பொருட்களும் அதிகரித்துள்ளதால் மக்களுக்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் சுமார் 100 கிராம் சீனி அடங்கிய பொதியை கான்பித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
ஐ்க்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினரும் முன்னால் தலைவருமான அநுர மடலுஸ்ஸ கருத்து தெரிவிக்கையில் கடந்த அரசாங்கம் அமைத்த சுயாதீனமானது என்றுகூறப்படும் தேர்தல் ஆணைக்குழுவின் ஒரு அஙகத்தவரான பேராசியர் ஹூல் அவர்கள் ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதில் இருந்து அதன் சுயாதீனமற்ற தன்மை வெளிப்படுவதால் அதற்கு எதிர்ப்பினை தெரிவித்து தான் இலம் கருப்பு நிர மேற் சட்டையை அனிந்து வந்துளள்தாக தெரிவித்தார்.
0 Comments