சீனாவின் வுஹான் நகரில் முதன்முறையாக கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு 9 மாதங்களுக்கு முன்னதாகவே ஸ்பெயினில் வைரஸ் பரவி இருந்தது ஆய்வாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பார்சிலோனா மாநகரத்தின் நீர் மேலாண்மையை நிர்வகிக்கும் ஐகஸ் டி பார்சிலோனா (Aigues de Barcelona) நிறுவனத்துடன் பார்சிலோனா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வுக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சேகரிக்கப்பட்ட கழிவுநீரில் தற்போது உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தோன்றிய விதம் குறித்து சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில் இந்த புதிய ஆய்வின் முடிவு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments