Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

மின், நீர் கட்டண பட்டியல் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்



மின் மற்றும் நீர் கட்டணம் தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லையென மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நீர் மற்றும் மின் கட்டணம் என்பவற்றுக்கென தேவையான நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கென வெவ்வேறு மின் கட்டண பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாத மின்கட்டண பட்டியலை ஒப்பிடும் வகையில் மார்ச் மாதத்திற்கான மின்கட்டண பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

எனினும் மார்ச் மாதத்திற்கான பட்டியல் அதிக கட்டணத்தை கொண்டதாக இருக்குமாயின் அது குறித்து 1987 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்கமுடியும்.

கட்டணங்களை செலுத்துவதற்கு அதிகபடியான நிவாரண காலத்தை வழங்குவது குறித்து அரசாங்கமே இறுதி தீர்மானத்தை எடுக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments