அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்தும் எங்கள் பாடல்களை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தினால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பிரபல பிரிட்டிஷ் இசைக்குழுவான ரோலிங் ஸ்டோன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
''அனுமதியின்றி எங்கள் குழுவினரின் பாடல்களை ட்ரம்ப் தனது பிரச்சாரத்தில் பயன்படுத்தி வருவதாக பிஎமை என்ற நிறுவனம் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து எங்கள் பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தினால், சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.
எங்களிடமிருந்து எந்தவித அனுமதியும் பெறாமல் எங்கள் பாடல்களை ட்ரம்ப் பயன்படுத்தி வருகிறார். வெறுப்புப் பிரச்சாரங்களில் எங்கள் பாடல்கள் பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோலிங் ஸ்டோன்ஸ் குழுவினரின் மிகவும் பிரபலமான ‘யூ ஆண்ட் ஆல்வேஸ் கெட் வாட் யூ வான்ட்’ என்ற பாடல் டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படும்.
ஏற்கெனவே 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்கள் பாடலை ட்ரம்ப் பயன்படுத்தியதற்கு ரோலிங் ஸ்டோன்ஸ் குழு கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments