Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

மக்களுக்கு கிடைக்ககூடிய அனைத்து சலுகைகளையும் இல்லாமல் செய்தவரே நவீன்திஸாநாயக்க: ஐக்கிய மக்கள் சக்தி பகீர் குற்றச்சாட்டு



மலையக பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்ககூடிய அனைத்து சலுகைகளையும் இல்லாமல் செய்தவரே ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் நவீன் திஸாநாயக்க என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்

நாவலப்பிட்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்து தெரிவிக்கையில்

மஹிந்த ராஜபக்ஸவை தற்பொழுது தான் கண்டது போல நவீன் திஸாநாயக்க கூறுகின்றார். கடந்த அரசாங்கத்தில் அங்கே இருந்துவிட்டு அவருடைய தந்தையாரின் பெயரை சொல்லி கொண்டு மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் அணியில் இணைந்தார்.

அங்கு இருந்து கொண்டு அவர் மஹிந்த ராஜபக்ஸவோடு டீல் செய்து கொண்டிருக்கும் நவீன் திஷாநாயக்க தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்ற எங்களை பார்த்து கூறுகிறார் இந்த தேர்தலுக்கு பின்னர் நாங்கள் ஆளும் மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கப் போகின்றோம் என்று.

நவீன் திஸாநாயக்க என்பவர் யார் என மக்கள் நன்றாவே அறிவர். மக்களுக்குக் கிடைக்க கூடிய அனைத்து சலுகைகளையும் இல்லாமல் செய்தவர்.

அவர் கூறுகின்றார் இதுதான் தன்னுடைய இறுதி நாடாளுமன்ற தேர்தல் என்று உண்மையில் இது அவருடை இறுதி நாடாளுமன்ற தேர்தல் மாத்திரமல்ல, இதுவே அவருடைய இறுதியாகவும் அமையும்.

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் 2010ஆம் ஆண்டில் எமது மக்களுடைய வாக்குரிமையும் வாழ்வுரிமைகளையும் பறித்து அட்டகாசம் செய்து எமக்கு இருக்க கூடிய பிரதிநிதித்துவத்தை அடித்து ஒடுக்கிய அந்த காலகட்டம் எமக்கு நன்றாக தெரியும்.

அதில் இருந்து நாங்கள் மீண்டு எங்களுடைய அடையாளத்தை காட்டி எமது வாக்குரிமை எடுத்து நிமிர்ந்து பயணிக்கின்ற காலத்தை நாம் தற்பொழுது ஏற்படுத்தியிருக்கின்றோம். மீண்டு அந்த அடாவடி காலம் மேலே வரகூடிய சூழ்நிலை தற்பொழுது காணக்கூடியதாக இருக்கின்றது. அதற்கு நாம் ஒரு போதும் இடமாளிக்ககூடாது.

சுயாதின தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரியவிற்கு நாம் ஒரு கோரிக்கையினை முன்வைக்கின்றோம் நாவலப்பிட்டி போன்ற தொகுதிகளிலே ஆரம்பித்திருக்கின்ற தேர்தல் வன்முறைகளுக்கு எதிராக செயற்பட வேண்டும் என அவருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments