Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கிழக்கில் முற்றாக நிராகரிக்கப்பட்டது தொல்லியல் மரபுரிமைக்கான ஜனாதிபதி செயலணி



கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் உருவாக்கம் நெருக்கடியான காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்டதன் உள்நோக்கம் தொடர்பில் திருகோணமலை பொது அமைப்புகளின் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.

இத்தகைய செயற்பாடுகள் இலங்கையின் ஒற்றைக் கலாசாரத்தை மாத்திரமே ஊக்குவிக்குமென திருகோணமலை பொது அமைப்புகளின் ஒன்றியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் ஆரம்பப் புள்ளியான இணைந்த வட கிழக்கும் தமிழர்களின் பூர்வீகத் தொன்மையும் மிக முக்கிய அலகுகளாகும்.

தமிழ் மக்களின் பாரம்பரிய இருப்பை சிதைக்கும் வகையிலேயே இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனால் இந்த செயலணியை முற்றாக நிராகரிப்பதாக அறிவித்துள்ள குறித்த அமைப்பு தமிழ் மக்களின் தொன்மையையும் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் அரசியல் நிகழ்ச்சி வேலைத்திட்டங்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments