Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் தொடரும் ஊடக அடக்குமுறை - பெண் ஊடகவியலாளரின் மடிக்கணினியை கையகப்படுத்திய சிஐடி



கொழும்பிலுள்ள பெண் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டைச் சோதனை செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர் பயன்படுத்திய மடிக் கணினியை எடுத்துச் சென்றுள்ளதாக தரிசா பஸ்டியன் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தான் பயன்படுத்திய மடிக்கணினியை கைப்பற்றியுள்ளனர் என தற்போது வெளிநாடொன்றில் உள்ள ஊடகவியலாளர் தரிசா பஸ்டியன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம்,

கடந்த நவம்பரில் இடம்பெற்ற ஆள்கடத்தல் தொடர்பான விசாரணைகளுடன் எனது பெயரை தொடர்புபடுத்தி பல மாதங்களாக தகவல்கள் வெளியாகிவந்துள்ளன.

இந்த விசாரணை தொடர்பில் இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் எனது சகாக்களையும் என்னுடன் முன்னர் பணிபுரிந்தவர்களையும் விசாரணை செய்துள்ளனர்.

குறிப்பாக எனது இலத்திரனியல் சாதனங்கள் குறித்து கேட்டறிந்துள்ளனர்.

கடந்த மே மாதம் 29ம் திகதியும், ஜூன் நான்காம் திகதியும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் எனது வீட்டிற்கு சென்று நீதிமன்ற அனுமதியின்றி எனது மடிக்கணிணியை எடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

எனது குடும்பத்தினர் சட்ட உதவியை பெற்றுக்கொண்டதுடன் நீதிமன்ற உத்தரவின்றி அதனை வழங்கமுடியாது என குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.

ஜூன் 9 ம் திகதி ஐந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எனது வீட்டை சோதனையிடுவதற்கான அனுமதியுடன் சென்றுள்ளனர்.

எனது படுக்கை அறை, எனது மேசை நான் பணிபுரிய பயன்படுத்தும் இடம் என அனைத்தையும் அவர்கள் சோதனையிட்டுள்ளனர். அத்துடன் ஒளிப்படங்களும் எடுத்துள்ளனர்.

எனது கணினியை கண்டுபிடித்த அவர்கள் அதனை கைப்பற்றியுள்ளனர், எனது மடிக்கணினியை எடுத்தமைக்கான ஆவணத்தினை வழங்கியுள்ளனர்.

எனது வீட்டில் வசிப்பவர்களிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.

குறிப்பிட்ட விசாரணை தொடர்பில் முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்ற அனுமதியின்றி எனது தொலைபேசி உரையாடல்கள் குறித்த பதிவுகளை பெற்றுக்கொண்டுள்ளனர். அதனை ஆராய்ந்த அவர்கள் பின்னர் விபரங்களை வெளிப்படுத்தினர்.

ஒரு பத்திரிகையாளர் என்ற அடிப்படையில் எனது தொலைபேசி உரையாடல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டமை குறித்து நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். அதன் காரணமாக எனக்கு கடும் ஆபத்து ஏற்படக்கூடும்,எனது செய்தி மூலங்கள் மற்றும் தொடர்புகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

நான் எந்த விசாரணை குறித்தும் பொருத்தமான அமைப்புடன் ஒத்துழைக்க தயராக உள்ளேன்.

எனது மடிக்கணினியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்தாலும், என்மீது குற்றச்சாட்டும் அளவிற்கு அவர்களிற்கு எதுவும் கிடைக்காது என நான் உறுதியாக நம்புகின்றேன்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நான் மடிக்கணிணியின் ஹார்ட்வெயர், தகவல்கள் ஆவணங்களின் நேர்மை தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கு உள்நோக்கம் கொண்ட சக்திகள் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும் என நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.

தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் உள்ள எனது மடிக்கணினி தொடர்பில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யப்படும் என்பது குறித்து நீதித்துறையினரின் மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டள்ளார்.

Post a Comment

0 Comments