கனடாவில் இலங்கை தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டரிலேயே மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
அதில் நடராஜா- மகேந்திரராஜா என்ற 52 வயதான நபரை கடந்த 21ஆம் திகதி முதல் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21ஆம் திகதி காலை 10 மணிக்கு Islington Ave & Elmhurst Dr பகுதியில் அவர் கடைசியாக காணப்பட்டார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
5 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட அவர் ஒல்லியான உருவம் கொண்டவர் ஆவார்.
காணாமல் போன அன்று நீல நிற சோட்ஸ் மற்றும் நீண்ட ஸ்லீவ் ரிசேட்அணிந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
0 Comments