Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

சேவல்கள் கூவுவதால் தான் விடிகின்றது என பெருமைப்பட முடியாது. முஸ்லிம் தலைவர்களை கிண்டல் செய்த முன்னாள் அமைச்சர்



பொழுதுகள் விடிவதற்காக சேவல்கள் பெருமைப்படுவது போலவே, சிலரது அரசியல் செயற்பாடுகள் உள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல். எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் கட்சிப் பணிகளை ஆரம்பித்து வைத்து ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அதிகாலையில் தான் கூவுவதற்காகவே பொழுதுகள் விடிவதாக சேவல்கள் நினைக்கின்றன. இவை கூவாவிட்டாலும் பொழுதுகள் விடிந்தேயாகிறது. இதற்காக சேவல்கள் பெருமைப்பட முடியுமா?

இவ்வாறு தான் சில அரசியல்வாதிகளும் எவராவது சாதிப்பதை தாங்கள் சாதித்ததாக நினைத்துப் பெருமைப்படுகின்றனர். இது பற்றி மக்களிடமும் இவர்கள் தம்பட்டம் அடிக்கின்றனர். அமைதியாக இருந்தவாறு இந்தப் போலிப் பெருமை அரசியல்வாதிகளை எமது மக்கள் அடையாளம் காணவேண்டும்.

கடந்த ஐந்து வருடங்களில் எதையும் இவர்கள் செய்ததுமில்லை. செய்திருந்தால் இத் தலைமைகளின் வாக்குறுதிகளில் நாம் நம்பிக்கை வைக்க முடியும். தலைவர் அஷ்ரஃபுக்குப் பின்னர் எந்த அபிவிருத்தியும் அடையவில்லை.

அயற் கிராமங்களுக்கும் அதிகாராங்களைப் பகிர்ந்தளித்து சகவாசத்தையும் விசுவாசத்தையும் வௌிப்படுத்திய தலைமை எமது தேசிய காங்கிரஸ் தான். அட்டாளைச்சேனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை கிராமங்களுக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சுப் பதவிகளையும் எமது கட்சியே வழங்கியது.

சம்மாந்துறையில் மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலை அமைச்சராக்கியதும் எமது அரசியல் தீட்சண்யம்தான். இந்த உண்மைகளைப் புறந்தள்ளி இன்று சில தலைமைகள் ஊரூராய் வந்து வீரவசனம் பேசிப் பெருமிதம் கொள்கின்றன. சேவல்களின் நிலைப்பாடுகளையே இது நினைவூட்டுகிறது. உரிமைகளை வென்றுதரப் புறப்பட்ட இத் தலைமைகளால் இன்று உள்ளதையும் எமது சமூகம் இழக்வேண்டிய ஆபத்தில் மாட்டியுள்ளது.

கல்முனையை சிங்கப்பூராகவும், சம்மாந்துறையை டுபாயாகவும் அபிவிருத்தி செய்யப் புறப்பட்ட இவர்கள் கொண்டு வந்த நல்லாட்சி அரசாங்கம் இன்று ஆட்சியில் இருந்திருந்தால் எமது பிரதேசங்கள் சோமாலியா போலாகியிருக்கும். சாந்தாங்கேணி மைதானத்தை சர்வதேச விளையாட்டு மைதானமாக மாற்றினார்களா?

நிந்தவூர் வைத்தியசாலை நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்ய முடிந்ததா? இல்லை. அக்கரைப்பற்று பிரதேச சபையை ஒரே இரவில் மாநகர சபையாக்கி கெய்ரோவின் கட்டடக் கலையால் அழகுபடுத்தினோம்.

எனவே உணர்ச்சியூட்டும் தலைமைகளின் அரசியலிலிருந்து விடுபட்டால்தான் எமது பிரதேசங்கள் அபிவிருத்தி,உரிமைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் எனவும் அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments