யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் வாள் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கொழும்புத்துறையில் இன்று நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் இன்று இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலில் வீடு ஒன்றில் இருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் அண்மையில் நடைபெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் மீட்கப்பட்டிருந்த வாளினையும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
0 Comments