நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவானது மீள் அறிவித்தல் வரை நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவித்தலில்,
தற்போது ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பொது மக்களின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு நாளை 14ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரும் வரையிலும், நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
எனினும், பொது மக்கள் சமூக இடைவெளிகளை தொடர்ந்தும் பேண வேண்டும் என்றும், சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments