யானை- மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அபிவிருத்தி நிர்மாண பணிகளை முன்னெடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நிர்மாண அபிவிருத்தி பணிகள் தொடர்பான சந்திப்பு இன்று பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம் பெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
முறையான திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தி நிர்மாண பணிகளை முன்னெடுக்காத காரணத்தால் வன விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் ஊடுருவுகின்றன.
இதில் யானை- மனித மோதலை பிரதானமாக குறிப்பிட வேண்டும். யானை மனித மோதலின் விளைவாக பாரிய இழப்புக்கள் நாளாந்தம் இடம்பெறுகின்றன.
அதனடிப்படையில் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அபிவிருத்தி நிர்மாண பணிகளுக்கான திட்டங்களை வடிவமைக்க வேண்டும். வன விலங்குகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் கொள்கை.
மகாவலி அபிவிருத்தி நிர்மாண பணிகள் அதிகார சபை, மற்றும் நீர்வழங்கல்,வடிகாலமைப்பு சபையின் கண்காணிப்பில் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நிர்மாண பணிகள் மீள்பரிசீலனை செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறைந்த செலவில் மக்கள் பயன்பெறும் விதத்தில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்குமாறு பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.
0 Comments