Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

திடீரென கேட்ட பலத்த சத்தம்! வானிலிருந்து விழுந்த மர்மப்பொருள்.. பதற்றத்தில் மக்கள்



இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் சஞ்சோர் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று பாரிய சத்தத்துடன் வானிலிருந்து பூமியில் விழுந்துள்ளது.

இந்த சத்தம் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு கேட்டதாகவும் அது விழுந்த இடத்தில் 2 அடிக்கு ஆழமான பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில் அந்த பொருள் மிகவும் சூடாக இருந்திருக்கிறது. அதனால் யாரும் அருகில் போகவில்லை.

அந்த பொருளின் எடை 2.78 கிலோ இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மர்ம பொருள் விழுந்த இடத்தில் ஒரு நகைக்கடை உள்ளதாம்.

அந்த நகைக்கடைக்கு சொந்தமான ஆய்வுக்கூடத்தில் அந்த கல்லை சோதனை செய்திருக்கிறார்கள்.

ஜெர்மானியம், பிளாட்டினியம், நிக்கல், இரும்பு என மொத்தமும் அந்த பொருளில் அடங்கி இருப்பது தெரியவந்துள்ளது..

எனினும் அடுத்தக்கட்ட சோதனைக்காக ஜெய்பூரில் உள்ள புவியியல் தொடர்பான ஆய்வகத்திற்கு அந்தபொருளை அனுப்பி வைக்க போகிறார்கள்.

பலத்த சத்தத்துடன் வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருளினால் மக்கள் இன்னமும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் அந்த பொருளில் இருந்து வெப்பம் அளவுக்கு அதிகமாக வெளியேறியதால் அந்த பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments