பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் இன்று பிரதமர் செயலகத்தில் விசேட உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
எதிர்வரும் பொதுத் தேர்தலானது நிரூபிக்கப்பட்ட திறமைக்கு முன்னுரிமை வழங்கவும், நல்லாட்சியின் பொய் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் கிடைத்தள்ள சந்தர்ப்பமாக இதை பார்க்கிறேன்.
இதேவேளை சுகாதார அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து, சூழலை பாதுகாத்து, முன்மாதிரியான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுமாறு வேட்பாளர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments