Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவை திருப்திப்படுத்தும் செயற்பாடே முன்னிலை சோசலிச கட்சியினர் மீது அரசாங்கம் மேற்கொண்ட தாக்குதல்!



ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் மகன் எனவும் மக்கள் தற்போது மனம் விரும்பி இணைந்திருப்பது மகனுடனே அன்றி தந்தையுடன் அல்ல எனவும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடனேயே தற்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு போட்டி காணப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சஜித் பிரேமதாசவுக்கு கட்சிக்கோ, நாட்டுக்கோ ஏதுவான தீர்மானங்களை எடுக்க முடியாமல் இருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கும் முன்னர் கண்டியில் நேற்று முன்தினம் வேட்பாளர்களுடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருக்கும் கொடுக்கல் வாங்கல்களை பொதுத் தேர்தலின் பின்னர் தீர்த்துக்கொள்வோம். அவர் பிரதமராகவோ கட்சியின் தலைவராகவோ இருக்கவில்லை. இதனால், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சுமத்தும் சில குற்றச்சாட்டுக்கள் சஜித்துக்கு பொருந்தாது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பது மாதுளுவாவே சோபித தேரரின் நிலைப்படாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் பதவிகளில் இருந்தவர்கள் இதனை எதிர்த்த காரணத்தினால், மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அன்று கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி இருந்தால், நல்லாட்சி அரசாங்கத்தில் பெரிய பிரச்சினைகள் உருவாகி இருக்காது.

இடதுசாரி மற்றும் வலதுசாரி கொள்கைகளை கொண்ட கட்சிகள் இணைந்து செயற்படும் போது பிரச்சினைகள் ஏற்படும். இதன் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கத்திற்குள் பிரச்சினைகள் ஏற்பட்டன. அமெரிக்காவுடனான எம்.சீ.சீ. உடன்படிக்கையை கிழிதெறிய போவதாக அன்று கூறிய அரசாங்கம் தற்போது அதனை மீளாய்வு செய்து வருகிறது.

இந்த உடன்படிக்கை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி அப்போது திருப்தியாக இருந்தது. அமெரிக்காவை திருப்திப்படுத்தவே அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் முன்னிலை சோசலிசக் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தியது எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments