யுத்தம் செய்து தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாமல் போனதையே விக்கினேஸ்வரனும் ரத்னஜீவன் ஹூலும் பிரேரணைகள் மூலம் மேற்கொள்ள முயற்சிக்கின்றனர் என பொதுஜன பெரமுன கொழும்பு மாவட்ட வேட்பாளர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
விக்கினேஸ்வரன் முதலமைச்சராக இருக்கும் போது சிங்கள மக்களுக்கு எதிரான 27 பிரேரணைகளை அங்கீகரித்திருக்கின்றார்.
வடக்கில் சுயாட்சியை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் ஆளுநர் விக்கினேஸ்வரன் தெரிவிக்கின்றார். இவர் நாட்டை துண்டாட முயற்சிப்பதாக சரத் வீரசேகர சாடல்
அதேபோல் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் இந்த நாட்டை சமஷ்டி முறைமைக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது. இவர்கள் இருவரும் இந்த நாட்டை துண்டாட முயற்சிக்கின்றனர்.
அன்று 30 வருட யுத்தத்தால் செய்ய முடியாமல் போனதை தற்போது இவர்கள் இருவரும் முயற்சிக்கின்றனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது இந்த கருத்துக்கள் ஒவ்வொன்றாக அவர்கள் முன்வைத்தனர். அதனைத்தான் நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் முன்வைத்தது.
மேலும், விக்கினேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் காலம் வந்திருக்கின்றது.
அத்துடன் கருணா தெரிவித்திருந்த கருத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யுத்தத்தை வெற்றிகொள்ள கருணாவிடமிருந்தும் குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பு கிடைத்தது. என்றாலும் அதற்காக தற்போது அவர் தெரிவித்திருக்கும் கருத்தை நியாயப்படுத்த முடியாது என்றார்.
0 Comments